சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய இலங்கைப் பெண் மாயம் : தவிப்பில் குடும்பம்!!

371

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மூன்று குழந்தைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பிவிடுவதாக தனது கணவரிடம் கடந்த மாதம் அவர் தெரிவித்திருந்தார்.



எனினும் அவர் வருகை தராததால் அ கணவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள CCTV காட்சிகளை பொலிஸார் சோதனை செய்தபோது, ​​ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா இரண்டு பயணப் பைகளுடன் வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.

காணொளியில் அடிப்படையில் , விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து, சாரதியை விசாரணைக்காக அழைத்தனர்.

விசாரணையின் போது, ​​சாரங்கா உதேஷிகா தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றதாக தெரிவித்தார்.

இருப்பினும், தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுடன் சாரங்காவின் கணவர் சென்று நடத்திய சோதனையின் போது எந்வொரு பெண்ணும் இங்கு வரவில்லை என்று சம்பந்தப்பட்ட வீட்டு குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக அவரது கணவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாடு திரும்பிய பெண் மாயமானமை குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கஹதுட்டுவ பொலிஸா விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.