இளமையை தக்கவைக்க ஒரு லட்சம் பணத்தையும் வாங்கிய வைத்தியர் உயிரையும் பலி எடுத்தார்!!

878

Beauty

கொழும்பு, பம்பலபிட்டி விசாகா வீதியில் இயங்கி வரும் அழகுசாதன நிலையத்தில் ஊசி ஏற்றிக்கொண்ட நிலையில் உயிரிழந்த மருத்துவர் தனது உடலை இளமையாக வைத்துக் கொள்வதற்காக ஒரு லட்சம் ரூபாவை சந்தேகநபரான வைத்தியர் நிமல் கமகேவுக்கு கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மருத்துவர் சந்தேகநபருக்கு 10,000 ரூபா வீதம் முன்னதாக 90,000 ரூபாவை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மூலமாக இந்த தகவல் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனது இளமையை தக்கவைத்துக் கொள்வதற்காக ஊசி ஏற்றிய பீ.ஏ. பிரியசிங்க என்ற 47 வயதுடைய பெண் மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மருத்துவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நிலையம், அழகுசாதன நிலையமாக பதியப்பட்டிருக்கவில்லை என அஜித் ரோஹன குறிப்பிட்டார்.