அவுஸ்திரேலியாவில் விசா பெறுவதற்காக அதிகரிக்கும் போலித் திருமணங்கள்!!

976

Marriage

அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் சுமார் 4500ற்கு மேற்பட்ட திருமணங்கள், விசா மோசடிகளுக்காக செய்யப்பட்ட போலி திருமணங்கள் என குடிவரவுத் திணைகளத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நிரந்தர வதிவிடம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அதிகமானவர்கள் பொய்யான திருமணங்களை செய்வதாக அவுஸ்திரேலியா குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இரு தரப்பிலும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றதாகவும் திருமணம் செய்து 6 மாத காலப்பகுதிகளில் விவாகரத்து செய்கின்ற சந்தர்ப்பங்கள் தான் கூடுதலாக கானப்படுகின்றதாகவும் ஆய்வுகளின் முலம் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து கூறிய குடிவரவு அதிகாரி இந்த திருமண விடயங்களில் மிகவும் இலகுவவாக அவுஸ்திரேலியா ஏமாறுகின்றது. எனினும் இவை சரியான முறையில் கையாளப்படாவிடின் பலருடைய வாழ்க்கை பிரச்சினை நிறைந்ததாகத்தான் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.