வவுனியாவில் அறநெறி வகுப்புக்கள் இடம்பெறுகின்ற போது தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அந்தணர் ஒன்றியம் கோரிக்கை!!

996

வவுனியா நகரப் பகுதியில் இயங்குகின்ற தனியார் கல்விநிலையங்களை கட்டுப்படுத்தி அறநெறி வகுப்புக்கள் நடத்த உதவி செய்யுமாறு வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அறநெறி வகுப்புக்கள் இடம்பெறுகின்ற போது தனியார், பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்வது தொடர்பாக வவுனியா அந்தணர் ஒன்றிய தலைவர் பிரபாகரக் குருக்கள் தலைமையிலான ஒன்றிய பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களையும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்களை சந்தித்து கலந்துரையாடி வேண்டுகோள் கடிதம் கையளித்துள்ளனர்.

01 1 2 3