வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரியின் இரண்டு கால்களும் முறிந்தன!!

594

Accident

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது இராணுவ டிரக் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று முன்தினம்(12.08) இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வவுனியா மடுகந்த வீதியினால் பிரயாணித்தக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியே விபத்திற்குள்ளாகினார்.

வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நந்தசேன (55) என்பரே காயமடைந்தவராவார். இவரது இரண்டு கால்களும் முறிவடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.