மூக்குடைந்த பிராட் முகமூடி இல்லாமல் விளையாடவுள்ளார்!!

431

Broad

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் முகமூடி இல்லாமல் விளையாடப்போகிறார் என்று கூறப்படுகிறது. மன்செஸ்டரில் நடந்த 4வது டெஸ்டில், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பிராடின் மூக்கு எலும்பு உடைந்தது.

துடுப்பாட்டத்தின் போது, ஆரோன் வீசிய பந்து பிராட்டின் மூக்கை பதம் பார்த்தது. பலத்த காயமடைந்த அவர், 5வது டெஸ்டிலும் சேர்க்கப்பட்டார். இவர் குணமடைந்து விட்டதால், காயத்தை பாதுகாக்க சிறிய ரக முகமூடி போட்டு விளையாடுவார் என முதலில் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிராட்டின் காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள், முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளனர். எனவே வலி ஏதும் இல்லாததால், முகமூடி இல்லாமலேயே விளையாட தயார் என பிராட் கூறியுள்ளார்.