டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய பிரதமர்!!

946

Rassia

ரஷ்ய பிரதமர் மெத்வதேவ்வின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது டுவிட்டர் பக்கத்தில், நான் பதவி விலகுகிறேன். அரசின் நடவடிக்கைகளால் நான் நாணுகிறேன். இது எனக்கு வருத்தம் தருகிறது என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தகவல் ரஷ்ய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இந்தத் தகவல் தான் வெளியிடவில்லை ரஷ்ய பிரதமர் மறுத்திருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தியதில், அவரது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் யாரோ விஷமிகள் புகுந்து கை வரிசையை காட்டியமை கண்டுபிடிக்கப்பட்டது. மெத்வதேவின் டுவிட்டர் பக்கத்தில் விஷமிகள் ஊடுருவியதை ரஷ்ய பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.