அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் பேஷன் ஷோ : கண்ணீர் வர வைக்கும் காட்சிகள்!!(வீடியோ)

398

இந்தியாவில் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உறுதியுடன் பேஷன் ஷோவில் அணிவகுத்த காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர செய்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ரூபா, ரீத்தா, சோனம், லக்‌ஷ்மி, சன்சஞ்ல் அகிய ஐந்து பெண்களும் அமிலத்தால் பாதிக்கப்பட்ட தங்களது முகத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மன உறுதியுடன் ஆடையகம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

ரூபாஸ் க்லோதி கலஹ்சன்ஸ் என்ற பெயரில் உள்ள இந்த கடைக்கு போஸ் கொடுத்த இவர்களை ராகுல் சகரான் என்ற புகைப்படக்காரர் வெகு அழகாக புகைப்படம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து ரூபா கூறுகையில், நான் பேஷன் டிசைனராக ஆசைப்பட்டேன், ஆனால் அமிலத்தால் பாதிக்கப்பட்ட பின் எனது வாழ்க்கையில் முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது, மேலும் ஒரு நாள் இவ்வாறு வெளி உலகத்துக்கு எனது திறமையை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை இருந்தது என கூறியுள்ளார்.

 

09 10 11 12 13 14