வவுனியாவில் 22வயது இளைஞரின் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை!!

6490

வவுனியா கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியில் இன்று (08.06.2025) காலை 22 வயது இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞனை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டின் முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.