வவுனியாவில் மின்னல் தாக்கி இருவர் பலி!!

766

minnal

வவுனியா நாமல்கம ரஜ விஹாரையின் பிரதம குரு காலி சிறிநந்த ரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் நேற்று (15.08) மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. கடும் வறட்சியை அடுத்து பல மாதங்களுக்கு பின்னர் நேற்று வவுனியாவில் மழை பெய்த போதே மின்னல் தாக்கமும் ஏற்பட்டது.

இதன்போது கடுமையான மின்னல் தாக்கத்திற்கு உள்ளான இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.