வவுனியாவில் வறட்சியை போக்க இன்றும் மதியம் முதல் இடியுடன் கூடிய கடும் மழை!!

600

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்ததுடன் கடும் வறட்சியும் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இன் நிலையில் நேற்று மாலை கடும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

மீண்டும் இன்று மதியம் முதல் வவுனியாவின் அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்கள் மட்டுமன்றி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று இடி தாக்கி வவுனியாவில் புத்த பிக்கு ஒருவரும் அவரது உதவியாளரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

-கஜேந்திரன்-

11 12 13 14 15 16 17