நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 8650 பேருக்கு எதிராக வழக்கு!!

913

Dengu

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 8650 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50,421 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 6769 இடங்கள் நுளம்பு பெருகும் வகையில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இதுபோன்று எதிர்வரும் காலங்களிலும் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.