கடும் வறட்சி காரணமாக அரிசிக்கு பற்றாக்குறை : விலைகளும் அதிகரிப்பு!!

574

Rice

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய நெல் அறுடை கிடைக்கப் பெறாமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சந்தையில் அதன் விலையும் அதிகரித்துள்ளது. இதேவேளை அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் நாளை நிதி அமைச்சுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை நிலவும் அரிசிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக, வரிச் சலுகையின் படி அரிசியை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கடந்த மாதம் சுமார் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அரிசிக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுமாயின், அரிசியை இறக்குமதி செய்வதில் அரசு தலையிட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.