அரைச் சதத்துடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் மஹெல ஜெயவர்த்தன!!

470

இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன சற்று முன்னர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்க, இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 14ம் திகதி கொழும்பில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்சில் 320 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அணைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை.

இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 332 ஒட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

மதிய போசன இடைவேளையின் பொது இலங்கை அணி 5 விக்கட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தனவுக்கு இது இறுதி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர், 54 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அஹமட் ஷகீட்டின் பந்து வீச்சில் ஷகீட் அஜ்மலிடம் பிடிகொடுத்து, இரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் வெளியேறியுள்ளார்.

இன்று மஹெல ஜெயவர்த்தன தனது 50வது அரைச் சதத்தை பூர்த்திசெய்தமை விசேட அம்சமாகும். மஹேல ஜெயவர்த்தனவின் ஓய்வு இலங்கை அணியில் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

 
Mahe Mahela Mahela11