95 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் : இந்தியாவில் தொடரும் பயங்கரம்!!

661

Abuse

பெங்களூரில் 95 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த முச்சக்கரவண்டி ஓட்டுனரை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பெங்களூரில் பேகூர் அருகே நியாப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த 95 வயது மூதாட்டி ஒருவர், பேனர்கட்டா மெயின் ரோட்டில் வசிக்கும் தனது உறவினரை நேற்று முன்தினம் பார்க்க சென்றுள்ளார்.

பின்னர் பேனர்கட்டா ரோட்டில் இருந்து ஒரு முச்சக்கரவண்டியில் ஏறி வீட்டிற்கு வந்தபோது திடீரென்று முச்சக்கரவண்டியை நிறுத்திய ஓட்டுனர், அருகில் உள்ள ஏரிக்கு அவரை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இதுபற்றி பொலிசில் அந்த மூதாட்டி புகார் அளித்ததையடுத்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அந்த ஓட்டுனரை தேடி வருகின்றனர்.