திரைப்பட நடிகரின் மனைவி திடீர் மாயம் : தீவிர தேடுதலில் பொலிஸ்!!

499

Missing

திரைப்பட நடிகர் கராத்தே ராஜாவின் மனைவி திவ்யா திடீரென காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்த கராத்தே ராஜாவிற்கும், புதுவையை சேர்ந்த திவ்யா (23) என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இவர்கள் தங்கள் 3 பெண் குழந்தைகளுடன் சாரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். படப்பிடிப்பு அதிகம் இருப்பதால் நேரம் கிடைக்கும்போது மாதத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மட்டும் ராஜா புதுவைக்கு வந்து சென்றுள்ளார்.

இதனால் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், கடந்த 13ம் திகதி திவ்யா தனது 3 குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு மார்க்கெட் செல்வதாக சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் கோரிமேடு காவல் நிலையம் சென்ற கராத்தே ராஜா இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து பொலிசார் திவ்யாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.