அதிகாலையில் நடந்த கோர விபத்து ஏழு பேர் வைத்தியசாலையில்!!

547

மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிரெதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு லொறிகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு குழந்தைகள் உட்பட 07 பேர் காயமுற்ற நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.