உடல் முழுவதும் துளையிட்ட நபரை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்த துபாய்!!

620

Man

ஜேர்மனியைச் சேர்ந்த உடல் முழுக்க துளை போட்ட கின்னஸ் சாதனையாளர் ஒருவரை துபாய் தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளது.

ஜேர்மனியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் ரோல்ஃப் பச்ஹோல்ஸ் (Rolf Buchholz) (53) என்பவர், தனது காது, மூக்குகளில் துளையிட்டு சிலவகை ஆபரணங்களை அணிய ஆரம்பித்துள்ளார்.

பின்னர் இதனால் நண்பர்களிடமிருந்து பெருத்த வரவேற்பு கிடைத்ததையடுத்து தனது உடலின் எல்லா பாகங்களிலும் துளையிட்டு அசத்தலான ஆபரணங்களையும் அணியத் தொடங்கியுள்ளார்.

இதன்மூலம், கடந்த 2012ல் தலையில் இரண்டு கொம்புகள் உள்பட, உடலின் பல பகுதிகளில் 453 துளைகளை இட்டுக்கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இதனால் உலகம் முழுவதிலும் இவருக்கென ரசிகர் பட்டாளமும் உருவாகத் தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்த பச்ஹோல்ஸை துபாய்க்கு வரவழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்த சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

துபாய்க்கு வந்த ரோல்ஃப் பச்ஹோல்ஸை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய அந்நாட்டின் குடியுரிமைத் துறை அதிகாரிகள், அவரை உடனடியாக இஸ்தான்புல் நாட்டுக்கு செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபற்றி ரோல்ஃப் பச்ஹோல்ஸ் கூறுகையில், பழமைவாத அரபு நாடுகளில் ஒன்றான துபாய் என்னை திருப்பி அனுப்பியதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

ஆனால் என்ன காரணத்துக்காக எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை அவர்கள் தெரிவிக்காததுதான் வருத்தம் அளிக்கிறது.
என்னை சூனியக்காரன் என்று நினைத்து விட்டார்களோ என்று தெரிவித்துள்ளார்.