உலகின் மிகவும் வறட்சியான பாலைவனமான அட்டகமா பாலைவனம், பனியால் சூழப்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம் இந்த தகவலை தனது X பக்கத்தில் காணொளியுடன் பதிவேற்றியுள்ளது.
வடக்கு சிலியில் அமைந்துள்ள குறித்த பாலைவனம் பல தசாப்தங்களாக அதிநவீன தொலைநோக்கிகளின் தாயகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அட்டகமாவில் உள்ள ALMA ஆய்வகத்தின் முக்கிய பிரிவு,10 ஆண்டுகளாக அந்த பாலைவனத்தில் பனி பொழியவில்லை என்று தெரிவித்துள்ளது.
செண்டியாகோ பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ரவுல் கோர்டெரோ, இந்த பனிப்பொழிவை காலநிலை மாற்றத்தில் ஒன்று என நிர்ணயிப்பது அவ்வளவு எளிதானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான அதிசய நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் என்ற வகையிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.