வவுனியா பம்மைமடு சந்தியில் இன்று (01.07.2025) காலை நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
வவுனியா மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பம்பைமடு இரானுவ முகாமை அண்மித்த பகுதியில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் வாகனத்திலிருந்த நெல் மூடைகள் சிதறியதுடன் வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.