இலங்கையை சேர்ந்த விமானப் பயணி ஒருவர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை, தனது ஜெக்கெட்டில் மறைத்து வைத்து, 19 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை கடத்த முயன்றதற்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
மருதானை சங்கராஜ மாவத்தையை சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரேகைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்காக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 என்ற விமானத்தின் இன்று காலை 09.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சந்தேக நபர் வந்துள்ளார்.
சுங்க அதிகாரிகள் குறித்த நபர் கொண்டு வந்திருந்த காலணிகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அதுவரை தான் அணிந்திருந்த ஜெக்கெட்டை கழற்றி அதை ஒரு நாற்காலியில் வைத்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரி, சோதனை செயல்முறையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் கழற்றிய ஜெக்கெட்டை எடுத்து ஆய்வு செய்தார்.
இந்நிலையில், அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 847 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரையும் குஷ் போதைப்பொருளையும் கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.