ஆந்திர மாநிலம், விஜய நகரம், கஜராயுனி வலசாவில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவர் குடும்பத்தினருடன் ஐதராபாத் புறநகர் பகுதியான ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகள் 23 வயது ரம்யா .
இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். வேல் துருத்தி மன்னேப் பள்ளியில் வசித்து வருபவர் 25 வயது பிரவீன் குமார்.
பி.டெக் பட்டப்படிப்பு முடித்த இவர் அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். அப்போது ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டிற்கு சென்ற பிரவீன்குமார் தங்களின் காதல் விவகாரம் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அதற்கு ரம்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மாப்பிள்ளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ரம்யாவின் வீட்டில் பெற்றோர் இல்லை என்பதை அறிந்த பிரவீன் குமார் அவரது வீட்டுக்கு சென்றார்.
அப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என வற்புறுத்தியுள்ளார். ரம்யா படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியதும் திருமணம் சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பிரவீன் குமார் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரம்யாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டிதுவிட்டார்.
இதில் ரம்யா ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பிரவீன் குமார் அதே கத்தியால் தனது கழுத்தை கொண்டார்.
அங்கிருந்தவர்கள் பிரவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மாணவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 வருட காதல் இனித்தது. கல்யாணம் என்று வரும்போது கசந்ததா எனக் கூறி காதலன் இதுபோன்ற ஒரு கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் முதல் கட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.