இறந்து 20 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை!!

195

நடிகை ஹுமைரா அஸ்கர் அலி உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலி (Humaira Asghar Ali) பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார்.

கராச்சியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவரது நடமாட்டம் இல்லாததோடு, அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனையடுத்து, ஜூன் 8 ஆம் திகதி அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மாலை 3 மணியளவில், வீட்டிற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை தட்டியும் திறக்காத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

வீட்டின் உள்ளே முற்றிலும் அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. அவர் இறந்து 20 நாட்கள் இருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர், இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹுமைரா அஸ்கர் அலியின் மரணம், பாகிஸ்தான் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.