வவுனியா செட்டிகுளத்தில் நான்கு நாட்களாக உயிருக்கு போராடும் யானை : காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள்!!

443

வவுனியா செட்டிக்குளம் மயில்முட்டையிட்ட குளப்பகுதியில் நான்கு நாட்களாக உயிருக்கு போராடும் யானையினை காப்பாற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த யானையின் கால் பகுதியில் வெடி பட்ட காயம் ஏற்பட்டுள்ளமையினால் யானையினால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு படுக்கையில் கிடந்தது.

யானை உணவின்றி எழும்பி நடக்க முடியாத நிலையில் அவதியுற்றமையினை அவதானித்த அயலவர்கள் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் யானையினை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யானைக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி தற்போது யானையின் நிலமை தேறிவருவதுடன் நாளையதினத்தினுள் யானை எழுந்து நடக்க கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.