வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

1062

நாடளாவிய ரீதியில் நடைபெறும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைய வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் கல்லூரியின் முதல்வர் ச.தயாகரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவகத்தின் பிரதி நிதியாக திட்டமிடல் பிரதி கல்வி பணிப்பாளர் ஜெனால்ட் அன்ரனி மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை மாணவர்களின் சிரமதானமும், சூழலைப்பாதுகாப்போம் மற்றும் நாட்டை வளர்ப்போம் எனும் தலைப்பில் வீதி நாடகமும் இடம்பெற்றது.

அத்துடன் மாணவர்களுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்களும், உணவுப்பாதுகாப்பும் எனும் தலைப்பில் பிரதேச சுகாதாரப் பரிசோதகரினால் செயலமர்வு இடம்பெற்றதுடன் இலைக்கஞ்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் இடம்பெற்றது.

இச் செயற்றிட்டம் செட்டிகுளம் பிரதேச சபை , செட்டிகுளம் பிரதேச செயலகம், செட்டிகுளம் பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, செட்டிகுளம் பொலிஸ், இராணுவத்தினர், பெற்றோர், பழைய மாணவர் போன்றோர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.