வவுனியா நெடுங்கேணி ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் 77சதவீத மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!!

1914

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டிருந்த நிலையில் வவுனியா நெடுங்கேணி ஒலுமடு தமிழ்மகா வித்தியாலயத்தில் 77சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக ஒரு மாணவர் 9ஏ சித்தி் பெற்றுள்ளமையுடன் 35 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அதில் 77 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.