புற்று நோய் காரணமாக இலங்கையில் வருடாந்தம் 11226 பேர் உயிரிழக்கின்றனர்!!

867

cancer

புற்று நோய் காரணமாக வருடாந்தம் 11226 பேர் உயிரிழப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த மரணங்களின் எண்ணிக்கையில் இது 8.8 வீதமாகும். 2012ம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக ஒரு மாத வயது முதல் 18 வயதானவர்கள் 677 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைக் காலமாக புற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.