கனடா அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ். இளைஞன் உயிர் மாய்ப்பு!!

676

கனடா அனுப்புவதாக முகவர் ஒருவர் ஏமாற்றிய நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 8 மில்லியன் ரூபாய் வழங்கிய நிலையில் ஏமாற்றப்பட்ட நபரே உயிரை மாய்த்துள்ளார்.

புங்குடுதீவை சேர்ந்த 34 வயதான செல்வராசா பாஸ்கரன் என்பவரே உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா அனுப்புவதாக வெளிநாட்டு முகவர் நிறுவனம் ஒன்று எட்டு மில்லியன் ரூபாவை அவரிடமிருந்து பெற்றுள்ளது.

எனினும் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், கனடாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தனது பணத்தை மீள கேட்டுள்ளார்.

இந்நிலையில் பணத்தை வழங்குவதில் நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வந்ததுடன், அது குழுவொன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.