யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கொடூரம் : தப்பியோடிய சந்தேக நபர்!!

553

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்று (23) இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தன் பின்னர் உயிரிழந்துள்ளார்.