இந்தியாவில் அரச பாடசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய விபத்து : நால்வர் பலி!!

468

இந்தியா – ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை கட்டிடத்தின் ஒரு பகுதி, இன்று காலை இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு மாணவர்கள் பலியாகியுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காலை 7.45 மணியளவில் அரச மேல்நிலைப் பாடசாலையில் காலை பிரார்த்தனைக்காக மாணவர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான வகுப்பறைகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது, கட்டிடத்திற்குள் குறைந்தது 17 மாணவர்கள் இருந்ததாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது பாடசாலை வளாகத்தில் இருந்த 27 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.