Google Map உதவியுடன் சென்ற கணவன் மனைவி காருடன் குளத்தில் விழுந்ததால் பரபரப்பு!!

624

Google Map காட்டிய பாதையில் சென்றதால் காரில் சென்ற கணவன் மற்றும் மனைவி இருவரும் குளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மாநிலமான கேரளா, கோட்டயம் செத்திப்புழையைச் சேர்ந்த தம்பதியினர் ஜோசி ஜோசப் (வயது62) மற்றும் ஷீபா (58). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மான்வெட்டம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

இதில் காரை ஒட்டிய ஜோசப் Google Map காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் கருப்பந்தரை என்ற இடத்தில் சென்ற போது குளத்தில் கார் விழுந்தது.

இதனால் கணவன் மற்றும் மனைவி இருவரும் வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அந்த வழியாக வழியாக வந்த பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்களை கயிறு மூலம் காரை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஜோசப் கூறுகையில், “சாலையில் வெள்ளம் தேங்கியிருந்ததால் ‘கூகுள் மேப்’ காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக கார் குளத்திற்குள் பாய்ந்தது” என்றார்.