விரைவில் வருகின்றது Windows 9!!

753

Windows-9

கணனிப் பாவனையில் விண்டோஸ் இயங்குதளமானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக அதன் பதிப்புக்களை தொடர்ச்சியாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டு வருன்றது.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட Windows 8 இயங்குதளமானது பயனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது Windows 9 இயங்குதளத்தினை மைக்ரோசொப்ட் உருவாக்கி வருகின்றது.

இந்த இயங்குதளம் 2015ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி அளவில் வெளியிடப்படவுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.