சுயநலவாதிகளாய் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

586

Ind

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலவாதிகள் என்று முன்னாள் வீரரும், பாரதீய ஜனதா எம்பியுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் ஏற்பட்ட இந்த தோல்வியால் அணித்தலைவர் டோனி மற்றும் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் 1983ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற முன்னாள் வீரரும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் இந்திய வீரர்கள் மீது கடுமையாக பாய்ந்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது வேதனைக்குரியதாகும். இதை பார்க்கும் போது வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது.

இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் நாட்டுக்காக மோசமாக ஆடுகிறார்கள். அதே நேரத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் அவர்கள் தங்கள் அணிக்காக அபாரமாக விளையாடுகிறார்கள், சுயநலவாதிகளாக இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.