
அவுஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானம் ஒன்றில் பயணித்த வாலிபர் ஒருவர் போதையில் பயணிகளிடம் தகராறு செய்ததையடுத்து அனைவரும் அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
டெல்லிக்கு கடந்த புதன்கிழமை மெல்பர்ன் நகரில் இருந்து வந்த ஏஐ301 என்ற விமானம் ஒன்றில் 27 வயதுடைய வாலிபர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
விமானத்தில் கொடுத்த மதுவை நன்றாக குடித்த அவர், போதையில் சக பயணிகளை பார்த்து கெட்ட வார்த்தையில் திட்ட தொடங்கியுள்ளார். இதையடுத்து, சில பயணிகளை பிடித்து அடிக்க தொடங்கியதோடு, பயணிகளின் சட்டைகளை கிழிக்க ஆரம்பித்துள்ளார்.
அதுவரை பொறுத்திருந்த பயணிகள், சட்டை கிழிப்புக்கு பின்னர் பொங்கி எழுந்து் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்ததோடு அவரை இருக்கையோடு இருக்கையாக கட்டி வைத்துள்ளனர்.
போதையில் வாலிபர் செய்த ரகளையால் விமானத்தின் கப்டன் பதறிப்போய் விமானத்தை டெல்லிக்கு திருப்பாமல் சிங்கப்பூரை நோக்கி விடுவதற்கு முடிவெடுத்துள்ளார்.
பின்னர், கட்டுப்பாட்டு அறையுடன் ஆலோசனை நடத்திய அவர் விமானத்தை டெல்லியை நோக்கி ஓட்ட தீர்மானித்துள்ளார்.
மேலும் விமானம் டெல்லியில் இறங்கியதும் விமானத்துக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார் வாலிபரை கைது செய்து அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





