வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வர் ஆலய அம்பாள் மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா 26.07.2025 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாலை ஐந்து மணிக்கு யாகபூசை கும்பபூசை மூலஸ்தான பூசையை தொடர்ந்து ஆறுமணியளவில் பாலமுருகன் குழுவினரின் விசேட தவில் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து தொடர்ந்து எட்டு மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. தொடர்ந்து மாலையில்ஒன்பது மணியளில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் அழகிய முத்து சப்பரத்தில் வீதிஉலா வந்தாள்.






