வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்களை உடன் கையகப்படுத்துங்கள் : முதல்வர் உத்தரவு!!

2359

வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்களை உடனடியாக மாநகரசபை கையகப்படுத்தி அதன் உரிமத்துவத்தை பேணுமாறு வவுனியாமாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் அறிவித்துள்ளார்.

வவுனியா மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன்  தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன் போது வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் மன்னார் வீதி கலைமகள் மைதானம்,

பூந்தோட்டம் மைதானம், மூன்று முறிப்பு மைதானம் உட்பட ஒரு சில இடங்களில் இருந்து மாநகரசபைக்கு கிடைக்கவேண்டிய வருமானம் கிடைக்காமல் போவதாக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆதனங்களை மாநகரசபையின் கீழ் கொண்டு வந்து அதன் வருமானம் மற்றும் பராமரிப்புசெயற்பாடுகளை மாநகர சபையே மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கையையும் முன் வைத்திருந்தனர்.

இதன் பிரகாரம் மாநகரசபைக்குட்பட்ட அனைத்து ஆதனங்களையும் மாற்றம் செய்து மாநகர சபைக்கு கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு செயலாளருக்கு முதல்வர் தெரிவித்தார்.