யாழ்ப்பாணம் சென்று திரும்பிய வாகனம் விபத்து : 2 பேர் பலி : 7 பேர் காயம்!!

770

Accident

யாழ்ப்பாணம் சென்று திரும்பிக்கொண்டிருந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வாகனம் மீது பின்னால் வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வாகனம் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கையில், நீர்கொழும்பு மாபாகே பகுதியில் வைத்து பின்னால் வந்த கனரக வாகனத்தில் மோதுண்டுள்ளதால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.