வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பண்டார வன்னியன் ஞாபகார்த்த நிகழ்வு!!(படங்கள், காணொளி)

698

பண்டார வன்னியன் ஞாபகார்த்த நிகழ்வு இன்று காலை 8.40 மணியளவில் வவுனியா செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலையருகே இடம்பெற்றது.

முல்லைதீவு கோட்டையை பண்டார வன்னியன் வெற்றிகொண்ட தினமான (25.08.1803) இன்றய தினத்தில் பண்டார வன்னியன் நினைவு தினமாக பிரகடனப்படுத்தி மேற்படி நிகழ்வு ஒழுங்கு செய்யபட்டிருந்தது.

இன்றைய நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், வவுனியா வர்த்தகர்கள் மற்றும் வவுனியா வாழ் கல்விச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் மாவீரன் பண்டார வன்னியனது சிலைக்கு மாலைகளை அணிவித்து நிகழ்வில் கலந்து கொண்டோர் வீரவணக்க மரியாதை செய்தனர். தொடர்ந்து பண்டார வன்னியன் சிலையடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தரப்பினர் காலை 9.15 மணியளவில் கண்டி வீதி ஊடாக நகரசபை மண்டபத்தை வந்தடைந்து.

அங்கு தேசியகொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. மேற்படி நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரான அருணா செல்லத்துரை மாவீரன் பண்டார வன்னியன் என்னும் தொனிபொருளில் பேருரை ஆற்றினார். பண்டாரவன்னியனதும் அடங்காபற்று வன்னி மண்ணின் அருமை பெருமைகளை உள்ளடக்கியதாக இந்த நினைவு பேருரை அமைந்திருந்தது.

தொடர்ந்து பண்டாரவன்னியன் பெருமை கூறுகின்ற நாட்டிய நாடகம் மற்றும் நடன நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இன்றைய ஒரு தேசிய வீரனது ஞாபகார்த்த நிகழ்வில் மிக குறைந்த அளவில் பொதுமக்களது மற்றும் இளைய தலைமுறையினரது பிரசன்னம் காணப்பட்டது மிக மனம் வருந்தத்தக்கதாக அமைந்திருந்தது என நிகழ்வில் கலந்து கொண்ட தரப்பினர் மத்தியில் அதிருப்தியும் வெளியிடிருந்தனர்.

-பண்டிதர்-

20 21 22 23 24 25 29 30k k2 k3 k42827 3126 32