
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய பயிச் செய்கையில் ஈடுபட்டு வரும் உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவனற்றை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு தங்களது விளைச்சலை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி 15 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 25 ரூபாவிலிருந்து 35 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.





