பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை : இரண்டாவது போட்டி இன்று!!

455

SL

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பாகிஸ்தான்–இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்ட சூரியவெவ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் நடக்க இருந்த இந்த போட்டி ஒருநாள் முன்னதாக நடத்த முடிவு செய்யப்பட்டு, பின்னர் ஹம்பாந்தோட்டைக்கு மாற்றப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால், தொடரை வென்று டெஸ்ட் போட்டியில் கண்ட தோல்வியை சரி செய்து விடலாம் என்று பாகிஸ்தான் அணி பகீரத முயற்சி எடுக்கும்.

அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழந்து விடாமல் இருக்க இலங்கை அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய யூனிஸ்கான் உறவினர் இறந்ததால் நாடு திரும்பியுள்ளார். இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாகும்.