ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

359

Smart Phones

மொபைல் வரலாற்றையே புரட்டி போட்ட ஸ்மாரட் போன்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி கண்காணிக்க வாய்ப்பிருப்பது உண்மைதான் என்கிறது கூகுள்.

ஒருவர் அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன் வைத்திருந்தலோ அல்லது அவரது கூகுள் கணக்கில் லொக்-இன் செய்திருந்தாலோ, அவர்களின் ஒவ்வொரு தகவல்களும் கூகுள் கணக்கில் கண்காணிக்கப்பட்டு, மாத கணக்கில் சேகரித்து வைத்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் சமீபத்தில் எங்கு பயணம் மேற்கொண்டீர்கள் என மிக துல்லியமாக காட்டும் கூகுளில் உள்ள ‘மாப்பிக்கிங் சாதனம்’ (Mapping Device). இதனை உங்களின் இடத்தை குறிக்கும் வரைபடத்தில் (location history map) காணமுடியும்.

ஒருவர் கூகுள் கணக்கில் ஒருமுறை லொகின் செய்துவிட்டால், அதிலுள்ள வரைபடத்தில் சிவப்பு நிற சிறிய ஒளியும், கோடுகளும் தென்பட்டு, நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பதையும், எங்கு இருக்கிறீர்கள் என்பதையும் காட்டும்.

இது குறித்து கூகுள் தெரிவிக்கையில், இந்த சேவை கட்டாயம் பயன்படுத்த வேண்டியதல்ல. இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி ஓப் செய்வது என்ற வழிமுறைகள் அளித்துள்ளேம் என்று குறிப்பிடுக்கிறது.

இதுமட்டுமா ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி வருவது உடல்நலம், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கிறது. தனக்குதானே புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் செல்பியால் பல்வேறு விபரீதங்களும் நடந்து வருகிறது.

எந்தவொரு பழக்கமும் குறிப்பிட்ட அளவை தாண்டினால் அடிமையாக்கி விடும், தகவல்களை பரிமாறக் கொள்ள பயன்படும் கருவியே போன்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.