திருப்பதியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித்தவித்த நடிகை!!

616

Trupathi

சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் நடிகை பிரணீதா தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரினம் செய்தார்.

பின்னர் திருப்பதியில் ஷோரூம் ஒன்றை திறந்து வைத்தார். நிகழ்ச்சியை முடித்து விட்டு காரில் ஏற சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். கூட்ட நெரிசலில் பிரணீதா சிக்கினார். அப்போது ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாதுகாவலர்கள் பிரணீதாவை மீட்டு காரில் ஏற்றினர். ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி பிரணீதா புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.