
கல்யாணமாகி நாலு மாசம் தான் ஆகிறது. 30 வயசுல இதெல்லாம் ரொம்பவே சோகம். எத்தனைக் கனவுகளுடன் தன் வாழ்க்கையை செதுக்கத் தொடங்கியிருப்பார்.. அத்தனையும் கனவுக் கோட்டையாக இடிந்து நொறுங்கியது.
ரஷ்யாவின் ட்வெர் ஒப்லாஸ்ட் பகுதியில் நடைபெற்ற கார் விபத்து ஒன்றில், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ரஷ்யா போட்டியாளர் க்சேனியா அலெக்ஸாண்ட்ரோவா காலமானார்.
கார் விபத்திற்குள்ளானதில், அலெக்ஸாண்ட்ரோவாவின் மூளையில் படுகாயம் ஏற்பட்டதாகவும், விபத்து நேர்ந்ததும், காரின் பின்னால் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த ரோவா,
அங்கிருந்து கீழே குதித்ததாகவும் தெரிகிறது. “ஒரு நொடி கடந்து விட்டது. எனக்கு எதுவும் செய்ய நேரமில்லை” என அவரது கணவரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்பின்னர் அலெக்ஸாண்ட்ரோவா விபத்தின் தாக்கத்தில் சுயநினைவை இழந்ததாகவும், கோமா நிலையை அடைந்ததாகவும் தெரிகிறது.
மாஸ்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மிஸ் ரஷ்யா அழகிப் போட்டியில் முதல் ரன்னர்-அப் ஆன பிறகு, கடந்த 2017 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அலெக்ஸாண்ட்ரோவா ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஒரு உளவியலாளராகவும் பணிபுரிந்த ரோவா, மாஸ்கோ கல்வியியல் மாநில பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அவரது மாடலிங் நிறுவனமான மோடஸ் விவேண்டிஸ், இன்ஸ்டாகிராமில், அவரை “அழகு, கருணை மற்றும் உள் வலிமையின் சின்னம்” என அழைத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தி உள்ளது.





