கார்ட்டூன் போல் மாறிய வினோத பெண்மணி!!

297

Cartoon

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் உருவத்தை கார்ட்டூன் போல மாற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் யோர்க்ஷையர் மாகாணத்தில் உள்ள வேக்பீல்ட் நகரை சேர்ந்த கிறிஸ்டினா (30) என்ற பெண், லிபிசா நகரில் சிகையலங்கார நிபுணராக பணிபுரிகிறார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர் சுற்றுலா சென்றிருந்தபோது சாலையோர ஓவியர் ஒருவர், இவரை கார்ட்டூன் ஓவியமாக வரைந்து காட்டியுள்ளார்.

இந்த ஓவியம் கிறிஸ்டினாவிற்கு பிடித்து போனது மட்டுமல்லாமல் அதை பார்க்கும்போதெல்லாம் தான் ஏன் அந்த ஓவியம் போல் மாறக் கூடாது என்ற எண்ணமும் தோன்றியுள்ளது.

எனவே மார்பக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, தனது மார்பகங்களை மிக பெரிதாக மாற்றியதுடன், பச்சையும் குத்திக்கொண்டுள்ளார்.

மேலும் முகத்தில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மற்றும் உதட்டை பெரியளவில் மாற்ற வேண்டும் என பல அறுவை சிகிச்சைகளை கிறிஸ்டினா பெற்றுள்ளார்.

இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், 1.5 கோடி செலவு செய்து உருவத்தை மாற்றியதன் மூலம் என் ஆசை நிறைவேறி உள்ளது என்றும் இந்த உருவத்தை பராமரிக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் செலவாகும் என்பதால் பணம் சம்பாதிக்க நான் கடுமையாக உழைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கிறிஸ்டினா இப்போது தான் மிகவும் அழகாக இருக்கிறார் என அவரது காதலர் டேவிட் கூறி சிலிர்க்கிறார்.