திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவரின் கண்களிலிருந்து மணல் கொட்டுவதை அப்பகுதி மக்கள் அதிசயத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்துள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (46). இவரது மனைவி பானு (40). இவர்களுக்கு யுவராணி (12), மித்ரா (8) என்ற 2 மகள்களும், ரவிச்சந்திரன் (5) என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வரும் யுவராணியின் கண்களிலிருந்து கடந்த 25 நாட்களுக்கு முன்பு மணல் கொட்டியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆரணி அரசு மருத்துவமனையில் யுவராணியை அனுமதித்தபோது, அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து அளித்த 3 நாள் சிகிச்சையால் கண்களிலிருந்து மண் கொட்டுவது நின்றுள்ளது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் யுவராணியின் கண்களிலிருந்து தொடர்ந்து மணல் கொட்ட தொடங்கியதால், மேற்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் யுவராணியின் பெற்றோர் திகைத்துள்ளனர்.