காணாமல் போன யுவதி : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!!

985

கேகாலை, மாவனெல்ல பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

21 வயதான தருஷி செவ்வந்தி திசாநாயக்க என்ற யுவதி கடந்த ஜூலை மாதம் முதல் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுவதியின் தந்தையால் மாவனெல்ல பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து காணாமல் போன யுவதி தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமல் போன யுவதி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071- 8591418 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.