ஓடும் புகையிரதத்தில் நடுவழியில் இளம் பெண் நீதிபதி மாயம் : தேடும் பணிகள் தீவிரம்!!

710

ரயில் ஓடிக் கொண்டிருக்கையில், திடீரென இளம் பெண் நீதிபதி தேர்வர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து நர்மதா எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவில் நீதிபதி அர்ச்சனா புறப்பட்டு சென்றுள்ளார். 29 வயதாகும் இவர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வருவதோடு, சிவில் நீதிபதி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தார்.

அந்தப் பயணத்திற்காக B3 – இடம் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவரது பையில் ரக்‌ஷா ஷாபந்தனுக்கான ராக்கி, பரிசுகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பரிசு பொருட்கள் இருந்தன.

அதே நாள் இரவு 10:16 மணிக்கு தனது அத்தைக்கு தொலைபேசியில் “போபாலுக்கு வந்து விட்டேன்” எனக் கூறினார். அதன் பிறகு அவரை காணவில்லை.

மறுநாள் காலை ரயில் கட்னி தெற்கு நிலையத்தில் காத்திருந்த போது அர்ச்சனா ரயிலில் இருந்து வெளியில் வரவே இல்லை.

அவரது பை மட்டும் பயணம் செய்த இருக்கையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கடைசி டிஜிட்டல் தடம் நர்மதா ரயில்வே பாலத்திற்கு அருகே செல்போன் பிங் மூலம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து கட்னி, இடார்சி பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. GRP காவல் கண்காணிப்பாளர் “அந்த நாளில் மத விழா நடைபெற்றது. அவளைக் கடத்தியிருப்பது கடினம்.

அதே நேரத்தில், தானாகவே அவர் இறங்கி மற்றொரு இடத்திற்கு சென்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது,” எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் அரச்சனாவின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணையை நாடியுள்ளனர்.

போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். அர்ச்சனா குறித்த தகவலை அளிப்பவர்களுக்கு ₹51,000 சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.