தமிழக மீனவர்கள் நால்வர் இலங்கை கடலில் மாயம்!!

967

Fisherman

மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற நான்கு தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக த ஹிந்து வெளியிட்டுள்ளது.

மண்டபம் வடக்கு கடலில் இருந்து மீன்பிடிக்கு சென்ற இவர்கள் கச்சதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலை மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அவர்களின் படகில் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.

இந்தநிலையில் அந்தப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் மூன்று படகுகளில் இருந்த மீனவர்கள் குறித்த படகில் உள்ளவர்களை காப்பாற்ற சென்றனர்.

எனினும் தாம் படகை சீர்செய்த பின்னர் திரும்புவதாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த படகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தமது படகை சீர்செய்த பின்னர் திரும்பியிருக்க வேண்டுமாயின் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு கரை திரும்பியிருக்க வேண்டும்

எனினும் அவர்கள் கரை திரும்பாமையை அடுத்து முதல்கட்ட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் இன்று காலை முதல் ஹெலிகொப்டர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மீனவத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmsyIRbLdex6.html#sthash.mhKxb7Mx.dpuf