வவுனியாவில் குளத்தின் கீழ் தடம்புரண்ட முச்சக்கரவண்டி : இளைஞர்களின் உதவியுடன் மீட்பு!!!

3494

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டில் நேற்று (22.08) மதியம் முச்சக்கரவண்டி குளக்கட்டு வீதியிலிருந்து தடம்புரண்டு கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

மாடசாமி ஆலய வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

எனினும் இவ் விபத்தில் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்திருந்தமையுடன் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை. இளைஞர்களின் உதவியுடன் குளக்கட்டின் கீழே வீழ்ந்த முச்சக்கரவண்டி வீதிக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.