
பிரித்தானியாவில் நோட்டிங் ஹில் திருவிழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் நோட்டிங் ஹில் (Notting Hill Carnival) திருவிழாவில், வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை இருப்பதை தடுக்கும் முயற்சியாக பொலிஸார் நூற்றுக்கணக்கானோரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“உளவுத்துறை அடிப்படையிலான தலையீடுகள்” என்ற நடவடிக்கையின் கீழ் பிரித்தானியா கிட்டத்தட்ட 100 பேரை கைது செய்துள்ளது. [
அதில் 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 11 துப்பாக்கிகள், 40க்கும் மேற்பட்ட கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் கண்காணிப்பு நிபந்தனைகள் மற்றும் பொலிஸ் பிணை ஆகியவற்றின் கீழ் 266 பேர் வைக்கப்பட்டுள்ளனர். இவர் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த நோட்டிங் ஹில் திருவிழாவில் 4 இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகின. இவற்றில் 2 நபர்கள் தனித்தனி தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
மேலும் 18 பொலிஸார் வரை தாக்கப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவே இந்த ஆண்டு பொலிஸார் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.





